Navbar - HGWC
Human Guidance & Welfare Centre
and
Jamiah Minhajis Sunnah
Jointly Present
5 Years Aalim Course Poster
ONLINE CLASSES 5 YEARS PROGRAM

5 Years Aalim Course

அஸ் ஸஃதி / அஸ் ஸஃதியா என்ற ஐந்து வருட ஆலிம் கல்வி பாடத்திட்டமானது அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜமாஆ கொள்கை அடிப்படையில் தலைசிறந்த மார்க்க அறிஞர்களின் வழிகாட்டல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆறு முக்கிய பாடங்களான இஸ்லாமிய கொள்கை, இஸ்லாமிய சட்டவியல், அரபு மொழி, குர்ஆன் கல்வி, ஹதீஸ் கல்வி, இஸ்லாமிய வரலாறு ஆகிய துறைகளில் அடிப்படை கல்வி முதல் துறை சார்ந்த விதிமுறைகள் மற்றும் விரிவான விளக்கங்களை கற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

About the Course

This five-year Aalim programme covers classical Islamic sciences with balanced contemporary studies. The syllabus includes intensive Arabic, Hadith, Tafsir, Fiqh, Seerah and methodological training for effective Dawah.

Course Promo Video

Key Subjects Covered

அகீதா

இஸ்லாமிய கொள்கை (அகீதா) பாடத்தில் ஈமானின் 6 அடிப்படைகள் முதல், மார்க்கத்தை புரிந்து கொள்வதில் அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜமாஆ வின் வழிமுறை மற்றும் இஸ்லாத்தின் பெயரில் காணப்படும் வழிகெட்ட கூட்டங்களின் கொள்கையும் ஆதாரங்களின் அடிப்படையில் அதற்கான மறுப்பும்.

ஃபிக்ஹ்

ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் அறிய வேண்டிய இஸ்லாத்தின் ஐந்து தூண்கள் (தொழுகை ஜகாத் நோன்பு ஹஜ் குறித்த சட்டங்கள் முதல் ஒரு மார்க்க விஷயத்தில் பல்வேறு இமாம்களின் கருத்துக்களுக்கு மத்தியில் ஆதாரங்களின் அடிப்படையில் ஒப்பீட்டாய்வு செய்வதோடு உஸுலுல் ஃபிக்ஹ் என்னும் மார்க்க சட்டவியல் விதிமுறைகள் வரை நடத்தப்படும்.

அரபி மொழி

அடிப்படை இலக்கண சட்டங்கள் முதல் அரபி கவிதை. இலக்கியம் மற்றும் அரபி மொழியின் சுருக்கமான வரலாறு மற்றும் அரபி மொழி புத்தகங்களை புரிந்து படிப்பதோடு அரபுலக தலைசிறந்த அறிஞர்களின் வகுப்புகளை நேரடியாக புரிந்து கொள்ள தேவையான வழிகாட்டல்களுடன் அரபு மொழி புத்தகங்களை மொழிபெயர்ப்பு பயிற்சி வரை நடத்தப்படும்.

அல்குர்ஆன்

சிறிய பல அத்தியாயங்களின் விளக்கம் முதல் கஹ்ஃப், யாஸீன், நூர், தவ்பா, அஹ்ஸாப், ஹஜுராத் அத்தியாயங்களின் விளக்கம் மற்றும் உஸுலுத் தஃப்ஸீர் என்னும் தஃப்ஸீர் கலையின் விதிமுறைகள் வரை நடத்தப்படும்.

ஹதீஸ்

40 ஹதீஸ்கள் என்னும் சிறிய நபிமொழி தொகுப்பை மனனம் செய்து விளக்கங்களை கற்றுக் கொள்வதோடு, உம்ததுல் அஹ்காம், ஸுனன் அத்திர்மிதீ, ஸுனன் அபூ தாவூத், ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் போன்ற மூலாதாரங்களின் சில பகுதிகள் மற்றும் உலூமுல் ஹதீஸ் என்னும் ஹதீஸ் கலையின் விதிமுறைகள் வரை நடத்தப்படும்.

இஸ்லாமிய வரலாறு

நபிகள் நாயகம் அவர்களின் தூய வாழ்க்கை வரலாறு மற்றும் நபிமார்கள் வரலாறு முதல் நேர்வழி பெற்ற 4 கலீஃபாக்களின் ஆட்சி, பனூ உமைய்யா, ஸ்பெயின், பனூ அப்பாஸிய ஆட்சி மற்றும் இந்தியாவில் இஸ்லாம் வந்த வரலாறு, நபிமார்கள், ஸஹாபாக்கள், கலீஃபாக்கள், முஹத்திஸீன்கள் வாழ்க்கையில் பெற வேண்டிய படிப்பினைகள் வரை நடத்தப்படும்.

Scholars & Instructors

Dr. Mubarak Maswood Madhani

Dr. Mubarak Maswood Madhani

Senior Instructor
As Sheik. Uwais Umari Nazeeri

As Sheik. Uwais Umari Nazeeri

Senior Instructor
As Sheik. Kamaludeen Madhani

As Sheik. Kamaludeen Madhani

Senior Instructor
As Sheik. Islamil Salafi

As Sheik. Islamil Salafi

Senior Instructor
As Sheik. Khous Khan Umari

As Sheik. Khous Khan Umari

Senior Instructor
As Sheik. Basheer Firdousi

As Sheik. Basheer Firdousi

Senior Instructor

Course Subjects (by Semester)

Semester 1
S.No Subject Code Subject Name Topics
1 ALM-101 Quran Recitation & Tajweed Tajweed rules, Murajaah, Basic recitation skills
2 ALM-102 Arabic Grammar I Nahw basics, Sarf introduction
3 ALM-103 Fiqh Foundations Ibadat basics: Taharah, Salah, Zakat
Additional training courses: Each semester includes additional training like public speaking, dawah methodology and tajweed workshops to supplement the syllabus.
Semester 2
S.No Subject Code Subject Name Topics
1 ALM-201 Quran Tafsir Intro Selected Surahs tafsir & methods
2 ALM-202 Arabic Grammar II Intermediate Nahw and Sarf
3 ALM-203 Hadith Studies I Introduction to Hadith sciences
Additional training courses: Advanced tajweed practice and dawah training sessions are included in this semester.
Semester 3
S.No Subject Code Subject Name Topics
1 ALM-301 Seerah & Sirah Studies Life of the Prophet ﷺ — selected topics
2 ALM-302 Aqeedah Studies Core beliefs and creeds
3 ALM-303 Fiqh (Practical) Family law, transactions basics
Additional training courses: Students will participate in community outreach programs and public speaking workshops.

Exam & Evaluation

Exam Pattern & Passing Criteria

Exam Types: Monthly, Quarterly, Semester, Final Exam

ComponentMarks
Oral25
Written75
Total100
Pass Required40%

Internal Marks Criteria

தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர வகுப்புகளின் படிப்பு நிலவரம் மற்றும் மாணவர்களின் ஒழுங்கு மற்றும் இதர பயிற்சி வகுப்புகளின் செயல்பாடுகள் ஆகிய அனைத்தையும் ஒவ்வொரு மாணவர்களையும் தனித்தனியாக கண்காணிக்கப்பட்டு மாணவர்களின் செயல்பாட்டிற்கு ஏற்ப உள் மதிப்பீடு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

இவை அனைத்தும் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் பதிவு செய்யப்பட்டு மாணவர்களின் தரத்திற்கு ஏற்ப சான்றிதழ் வழங்கப்படும் அல்லது கூடுதல் பயிற்சிகள் தேவைப்படும் மாணவர்களுக்கு அந்த துறையில் / பாடத்தில் முழு தேர்ச்சி அடைந்த பிறகு சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் வகுப்பு இறுதியில் உலமாக்களிடம் நேர்முக தேர்வு நடத்தப்பட்டு அவர்களின் நற்சான்று பெற்ற பிறகு தான் ஆலிம் /ஆலிமா பட்டம் வழங்கப்படும்.

Rules of the Course

  1. மாணவர்கள் அனைவரும் கட்டாயம் அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜமாஆ கொள்கை அடிப்படையில் செயல்பட வேண்டும்.
  2. மார்க்கத்திற்கு முரணான / பித்அத்தான காரியங்களில் ஈடுபடக்கூடாது.
  3. நமது வகுப்பில் நடத்தப்படும் அனைத்து பாடங்கள் மற்றும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு தேவையான நேரத்தை ஒதுக்கி ஆர்வத்துடனும் கடின முயற்சியுடனும் படிக்க வேண்டும்.
  4. ஒவ்வொரு பாடத்தின் Zoom வகுப்பில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
  5. ஒவ்வொரு வகுப்புகளையும் அடுத்த வகுப்பு பகிர்வதற்கு முன் குறிப்பெடுத்து எழுதி, படித்து, மனனம் செய்ய வேண்டிய பகுதிகளை மனனம் செய்து முறையாக முடித்திருக்க வேண்டும்.
  6. வாராந்திர மற்றும் மாதாந்திர Zoom பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
  7. வகுப்பில் கொடுக்கப்படும் அனைத்து விதமான வீட்டு பாடங்களை தவறாமல் எழுதி குறித்த நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
  8. மாணவர்களின் தினசரி செயல்பாடுகள் கொண்ட கண்காணிப்பு அட்டவணையை குறித்த நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
  9. அல் குர்ஆனை மனனம் செய்வதில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒரு ஜுஸ்வு மனனம் செய்ய வேண்டும்.
  10. அரபு மொழி பாடத்தில் கொடுக்கப்படும் எழுத்து வாசிப்பு பயிற்சிகள் மற்றும் வீட்டு பாடங்களை கண்டிப்பாக செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  11. பேச்சு பயிற்சி / ருகைய்யா போன்ற கூடுதல் பயிற்சி வகுப்புகளிலும் கட்டாயம் கலந்து கொண்டு படிக்க வேண்டும்.
  12. செமஸ்டர் இறுதி தேர்வுகளை எழுதி நமது முகவரிக்கு கொரியர் மூலம் அனுப்ப வேண்டும்.
  13. ஆண்டுக்கு ஒரு முறை சென்னையில் நடத்தப்படும் நேரடி தேர்வு மற்றும் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். [வெளிநாட்டு மாணவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு]
  14. டிகிரியும் சேர்த்து படிக்கும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் வாயிலாக பகிரப்படும் அஸைன்மெண்ட் எழுதி நேரடியாக நடத்தப்படும் ஆண்டு இறுதி தேர்வுகளிலும் காட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.
  15. ஐந்து வருட இறுதியில் நடத்தப்படும் நேரடி தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மட்டுமே ஆலிம்/ ஆலிமா சான்றிதழ் வழங்கப்படும்.
  16. மேற்கூறப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் ஒவ்வொரு மாணவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். முறையாக படிக்காமல் வகுப்பு விதிமுறைகளை மீறும் மாணவர்கள் வகுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள்.
Discontinuation: மாணவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் இடை நிற்றல் கூடாது. மிகவும் தவிர்க்க முடியாத காரணங்களால் இடையில் வகுப்பை தொடர முடியாத பட்சத்தில் அபராத தொகை ரூ.25,000 செலுத்திய பிறகே வகுப்பில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அதன் பிறகே ஒரிஜினல் சான்றிதழ் ஒப்படைக்கப்படும்.

Fee Structure

ItemAmount (INR)
Admission Fees (Including 1st Year Books)₹10,000
Preparatory Fees₹3,000
Semester Fee (Every 6 Months)₹10,000
Yearly / Book Fees (2nd Year to 5th Year)₹5,000

Frequently Asked Questions

ஏற்கனவே ஆலிம் / ஆலிமா அல்லது BAIS போன்ற படிப்புகளை முடித்த மாணவர்கள் சேர முடியுமா?
ஆம். ஆனால் முதலாம் ஆண்டு வகுப்பில் இருந்து தான் படிக்க வேண்டும்.
தமிழ் மட்டுமே தெரிந்த மாணவர்கள் ஆலிம் கல்வி வகுப்பில் இணைய முடியுமா?
ஆம்.
வகுப்பு கட்டணம் ஏதேனும் உண்டா?
ஆம்
வெளிநாட்டில் இருந்து படிக்க முடியுமா?
ஆம். ஆலிம் கல்வி வகுப்பில் மட்டும் இணைந்து படிப்பதாக இருந்தால் முழுமையாக வெளிநாட்டில் இருந்து கொண்டே படிக்கலாம். [ஐந்து வருட இறுதியில் நடத்தப்படும் நேரடி தேர்வில் கலந்து கொண்ட பிறகே சான்றிதழ் வழங்கப்படும்.] டிகிரியும் சேர்த்து படிக்க விரும்பும் மாணவர்கள் கண்டிப்பாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இறுதி தேர்வுகளை தமிழ்நாட்டில் உள்ள ஏதேனும் ஒரு மாவட்டத்தின் கல்லூரியில் சென்று எழுத வேண்டும்.
+2 படிக்காத மாணவர்கள் டிகிரி படிப்பில் சேர முடியுமா?
இல்லை, இந்திய அரசின் சட்டப்படி எந்த ஒரு டிகிரி படிப்பிற்கும் +2 தேர்ச்சி கட்டாயம். ஆனால் நமது மதர்ஸாவின் ஆலிம் பட்டத்தை முழுமையாக படிக்கும் மாணவர்கள் பெறலாம்.
எந்த மொழிகளில் பாடங்கள் நடத்தப்படுமா?
தமிழ், அரபி (இறுதி ஆண்டுகளில்)
ஒவ்வொரு பாடத்திற்கும் புத்தகங்கள் வழங்கப்படுமா?
ஆம்
வகுப்பு வீடியோக்களை மட்டும் பார்த்தால் போதுமானதா?
இல்லை, ஒவ்வொரு வகுப்பின் Zoom வகுப்பில் கலந்து கொண்டு குறிப்பெடுத்து எழுதி மனனம் செய்து முழுமையாக படிக்க வேண்டும்.
தவிர்க்க முடியாத காரணங்களால் சில வாரங்கள் படிக்க முடியாமல் போனால் வகுப்பை தொடர முடியுமா?
ஆம். அதிகபட்சமாக இரண்டு வாரங்கள் அனுமதி உண்டு. ஆனால் நிலைமை சீரான பிறகு உடனடியாக நிலுவையில் உள்ள பாடங்களை படித்து முடிக்க வேண்டும்.
பாடங்கள் எவ்வாறு பகிரப்படும்?
ஒவ்வொரு பாடமும் முறையாக பதிவு செய்யப்பட்டு மாணவர்களின் மெயில் ஐடி இணைக்கப்பட்ட யூடியூப் லிங்க் மூலம் வகுப்பு குழுமத்தில் பகிரப்படும்.
வகுப்பு வீடியோக்களை பதிவிறக்கம் செய்யலாமா? பிறருக்கு பகிர அனுமதி உண்டா?
இல்லை. வகுப்பு வீடியோக்களை பதிவிறக்கம் மற்றும் பகிர்வது தடை செய்யப்பட்டுள்ளது.
பாட சம்பந்தமான சந்தேகங்களை எவ்வாறு கேட்டு தெரிந்து கொள்வது?
ஒவ்வொரு பாடத்தின் Zoom வகுப்பில் கேட்கலாம். மேலும் மாணவர்களுக்கான வாட்ஸ்அப் குழுமத்தில் எந்த நேரத்திலும் சந்தேகங்களை கேட்கலாம். 24 மணி நேரத்திற்குள் தகுந்த பதில் வழங்கப்படும்.
மாணவிகளுக்கு பெண் ஆசிரியைகள் மூலம் வழிகாட்டல் உள்ளதா?
ஆம். தஜ்வீத்/ அரபு மொழி பாடங்கள், சந்தேகங்கள் மற்றும் பேச்சு பயிற்சி போன்றவைகளுக்கு பெண் ஆசிரியைகள் மூலம் வழிகாட்டல் வழங்கப்படும்.
தேர்வுகள் எவ்வாறு நடைபெறும்?
ஒவ்வொரு வாரமும்/ மாதமும் வாய்வழி தேர்வு (Oral Test) நடைபெறும். காலாண்டு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் எழுதும் முறையில் நடைபெறும்.
நேரடி தேர்வுகள் உண்டா?
ஆலிம் வகுப்பு: ஆம், உள்நாட்டில் வசிக்கும் மாணவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை நேரடி தேர்வு எழுத வேண்டும். ஐந்து வருட இறுதி தேர்வு அனைத்து மாணவர்களும் கட்டாயமாக நேரடியாக வந்து தேர்வு எழுத வேண்டும். டிகிரி படிப்பு: ஆம். டிகிரி படிப்பில் இணைந்து கற்கும் மாணவர்கள் ஆண்டு தோறும் பல்கலைக்கழகம் வாயிலாக நடத்தப்படும் தேர்வுகளை தங்களின் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் எழுத வேண்டும்.
இந்த கல்வி வகுப்பை முடித்த மாணவர்கள் அரபு நாடுகளில் உள்ள கல்லூரியில் இணைந்த படிக்க முடியுமா?
வகுப்பை சிறந்த முறையில் படித்து அரபு மொழியிலும் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அரபு நாடுகளில் உள்ள கல்லூரியில் இணைந்து படிக்கலாம்.
அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படுமா?
ஆம். டிகிரியும் சேர்த்து படிக்கும் மாணவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் வாயிலாக B.A சான்றிதழ் வழங்கப்படும். ஆலிம்/ ஆலிமா சான்றிதழ் நமது மதர்ஸாவின் வழியாக வழங்கப்படும்.
ஆலிம் வகுப்பை முடித்த பிறகு பள்ளிவாசலில் இமாமாக பணியாற்ற முடியுமா? மதரஸாக்களில் ஆசிரியராக பணியாற்ற முடியுமா?
ஆம். சிறந்த முறையில் கற்கும் மாணவர்கள் தாராளமாக பல்வேறு துறைகளில் சேவை புரியலாம்.

Enquire About the Course

Ready to Begin Your Journey?

Take the first step towards becoming an Islamic scholar. Contact us today for admission details and guidance.

Visit Us

Poonamallee, Chennai
Tamil Nadu, India

Call Us

+91 9500 114 276
+91 12345 67890

Email Us

hgwcpoovai@gmail.com
admissions@hgwc.in

Office Hours

Saturday - Thursday
9:00 AM - 6:00 PM